தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழை பெய்தது. இதனால் மலை அடிவாரங்களில் உள்ள குற்றாலம் போன்ற அருவிகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
எனவே பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆற்றுப்படுகையின் ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கு வருகைபுரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் மாவட்ட நிர்வாகிகள் அருவியில் நீர்வரத்து குறைந்த பிறகு வழக்கம் போல் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.