விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி நிதி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்  

சுமார் 40 விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்டிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (அக்டோபர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.

2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சி, விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியானது உள்நாட்டு விண்வெளி நிறுவனங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மேலும் முதலீட்டை ஈர்க்கவும் உதவும்.
2022 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPAce), ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் நிதியை நிர்வகிக்கும்.

You May Also Like

More From Author