கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 19ஆம் தேதி லோக்ஆயுக்தாவின் காவல்துறையினர் ரெய்டு மேற்கொண்டனர்.
அவர்கள் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களின் வீடுகளில் இருந்த நகைகள், ரொக்க பணங்கள், வெள்ளிப் பொருள்கள், வாகனங்கள் மற்றும் சொத்து பாத்திரங்களை கைப்பற்றியதோடு, அவர்களது வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அரசு அதிகாரிகளில் ஒருவரான அத்தார் அலி வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதையறிந்த அத்தார் அலி தனது வீட்டில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஒரு பையில் வைத்து பக்கத்து வீட்டில் வீசியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிய வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு ஒரு பை கிடந்தது. அதனை எடுத்துப் பார்க்கும்போது ரொக்க பணங்கள், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து அத்தார் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அத்தார் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கவால்துறையினர் கையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டில் பேசியதாக தெரியவந்தது.
மேலும் இந்த சோதனையில் பல கோடி மதிக்கத்தக்க தங்க நகைகள், ஏர்கன், வெள்ளி பொருட்கள் மற்றும் , கைதுப்பாக்கி மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் ரொக்க பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் லோக்ஆயுக்தா காவல்துறையினரின் நடவடிக்கையால் அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.