சீன ஊடக குழுமத்தின் பாரிஸ் ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பு தொழில் நுட்பங்கள்

பாரிஸ் ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் செய்தி வெளியீடு பற்றிய சீன ஊடக குழுமத்தின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க வெளியீட்டு நிகழ்ச்சி ஜூலை 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன ஊடக குழுமத்தால் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட பத்து அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க பயன்பாடுகள் வெளியிடப்பட்டன.
சீன ஊடக குழுமம், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மிக அதிகமான நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்யும் அனுமதியைப் பெற்ற சர்வதேச ஊடகமாகும்.

சீன ஊடக குழுமம், சிந்தனை, கலை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த புத்தாக்கத்தை ஆக்கமுடன் முன்னேற்றி, அதி உயர் தெளிவு, செயற்கை நுண்ணறிவு, 5ஜி மற்றும் மேக மேடை முதலிய புதிய தொழில் நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பன்முகங்களிலும் ஒளிபரப்பு செய்து, செய்தி வெளியிடவுள்ளது.

You May Also Like

More From Author