பாலைவன பகுதியில் காய்கறி சாகுபடி

 

சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள மின்ச்சின் மாவட்டத்தில் தண்ணீர் வசதி எப்போதும் மிகப்பெரிய பிரச்சினை. இங்கு காய்கறிகள் வளர்க்க முடியுமா என்ற சந்தேகத்தை மக்கள் எழுப்பினர். இங்குள்ள மக்கள் அனைவரும் ஒட்டகங்களில் பயணம் செய்வதாக மற்றவர்கள் நினைத்தார்கள்.
வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள மின்ச்சின் மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகள், டெங்கர் மற்றும் படேன் ஜரான் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளன. இப்பகுதியின் 94.5 சதவீத பரப்பளவு பாலைவனமாக இருந்தது. அங்கு நீர் ஆவியாதல் வீதம் மழைப்பொழிவை விட 20 மடங்கு அதிகம். மின்ச்சின் மாவட்டம் பாலைவனமாகி வரைபடத்திலிருந்து மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சூ எர்சாய் மற்றும் அவரது மனைவி சென் யிங், மின்ச்சின் மாவட்டத்தைச் சேரந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளில், கோபி பாலைவன சவால்களை எதிர்கொண்ட அவர்களால், சாதகமற்ற சூழ்நிலைகளால் போதிய வருவாய் ஈட்டும் நல்ல வழியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
2017ஆம் ஆண்டில், சீனா கிராமப்புற மறுமலர்ச்சி உத்திநோக்குத் திட்டத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. வேளாண் முயற்சிகளை ஆதரிக்கும் கொள்கைகளின் உதவியுடன், சூ எர்சாய் மற்றும் சென் யிங் காய்கறிகளை வளர்க்க முடிவெடுத்தனர். வடமேற்கு பீடபூமியில் கோடைக்காலத்திலும் குளிர்ச்சி நிலவும். ஏராளமான சூரிய ஒளி, இரவு மற்றும் பகல் இடையில் குறிப்பிடத்தக்க வெப்பநிலை வேறுபாடு ஆகியவை, காய்கறிகளை வளர்ப்பதற்கு நல்ல சூழ்நிலைகள். ஆனால் பாசனத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஒரே பிரச்சனையாக இருந்தது.
தற்போது நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விநியோகிக்கும் குழாய்களை அரசு அமைத்துள்ளது. இதன் மூலம் எங்கள் நிலத்தில் நீர் பாசனம் செய்ய முடிகிறது. மேலும் எங்களிடம் தெளிப்பு மற்றும் சொட்டு நீர்ப்பாசன உபகரணங்கள் உள்ளன. இவை முன்கண்டிராத முன்னேறிய நிலையில் உள்ளன. இங்கு காய்கறிகளை வளர்க்க முடியும் என்று முன்பு நினைத்துக்கூட பார்க்கவில்லை என காய்கறி வளர்க்கும் விவசாயி சூ எர்சாய் தெரிவித்தார்.
எங்களுக்கு அது உயிர் காக்கும் நீர். இத்தகைய பயனுள்ள நீர்ப்பாசன அமைப்பு இல்லாவிடில், காய்கறி வளர்ப்பை மேற்கொள்ள முடியாது என்று சென் யிங் தெரிவித்தார்.
இங்குள்ள காலநிலை காய்கறிகளுக்கு ஏற்றது. நேரடியாக சாப்பிட்டால், காய்கறிகள் இனிப்பாக இருக்கும். ஆற்றின் நீரால் பாசனம் செய்யப்படுவதால், பிற இடங்களில் வளர்க்கப்படும் காய்கறிகளிலிருந்து அவை வேறுபடுகின்றன. காய்கறிகளின் நிறம் மற்றும் தரம் வாடிக்கையாளர்களுக்கு அதிக மனநிறைவு அளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author