ஷி ச்சின்பிங்-முகமது தொலைபேசி தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சௌதி அரேபிய இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமதுடன் தொலைபேசி மூலம் 28ஆம் நாள் தொடர்பு கொண்டார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சௌதி அரேபியாவுடன் இணைந்து, மைய நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றுக்கு ஒன்று உறுதியுடன் ஆதரவளித்து, இருதரப்பு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. பெய்ஜிங் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சௌதி அரேபியாவும் ஈரானும் உறவை மேம்படுத்துவதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றார்.

சௌதி அரேபியாவின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக சீனா திகழ்கின்றது. சீனாவுடனான உறவில் சௌதி அரேபியா உயர்வாக கவனம் செலுத்துகின்றது. சீனாவுடன் இணைந்து இரு நாட்டு ஒத்துழைப்பை முன்னேற்ற விரும்புகின்றோம் என்று முகமது தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author