சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குவாங்துங் மாநிலத்திலுள்ள குவாங் சோ மாநகரில் ஏப்ரல் 7ஆம் நாள் பிற்பகல் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குவாங்சோ, சீனாவின் ஜனநாயகப் புரட்சிக்கு வித்திட்ட இடமாகும். அதோடு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் முன்னணியில் உள்ளது. சீனாவின் நவீனமயமாக்கத்தைச் சீனா பன்முகங்களிலும் முன்னேற்றி வருகின்றது. சீனாவின் வளர்ச்சி எதிர்காலத்தின் மீது முழு நம்பிக்கை கொள்கின்றோம் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
ஒன்றுக்கு ஒன்றுடனான புரிந்துணர்வு மற்றும் மதிப்பு ஆகியவையே உண்மையான நட்புக்கான அடையாளம் என்று மக்ரோன் கூறினார்.
மேலும், இச்சந்திப்பின் போது, உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.