சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அழைப்பையேற்று, டிசம்பர் 6ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பு வெற்றிகரமானதாக நிறைவடந்தது.
இச்சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி சுமுகமான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியின் திசை நோக்கி சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவது தற்போது இரு தரப்பின் முக்கியக் கடமையாகும் என்றார்.
மேலும், தைவான் விவகாரத்தில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை வாங்யீ மீண்டும் வலியுறுத்தினார். சீன உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும் எந்த“தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்திக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.
பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் குறித்து அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு மத்திய கிழக்கு நிலைமை குறித்து தொடர்பை நிலைப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிளிங்கன் ஒப்புக்கொண்டுள்ளாதாகத் தெரிவித்தார்.