நேபாளத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் முதலாவது சீனப் பயணிகள் குழு சிறப்பு விமானம் மூலம் ஏப்ரல் 13ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவைச் சென்றடைந்து, 8 நாட்கள் தொடரும் நடைப் பயணத்தைத் தொடங்கியது.
நேபாளத்தின் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டுக்கு வந்த 180 சீனப் பயணிகளுக்கு, அந்நாட்டின் பண்பாடு, சுற்றுலா மற்றும் பயணியர் விமானத் துறை அமைச்சர் சூடான் கிராட்டி வரவேற்பு தெரிவித்தார். நீண்ட வரலாறுடைய நேபாள-சீன நட்புறவை புதிய உயர் நிலைக்கு முன்னேற்ற நேபாளம் விரும்புவதாக விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அவர் கூறினார்.
இதனிடையில், நேபாளம் உள்பட வெளிநாடுகளுக்கு குழுவான சுற்றுப்பயணச் சேவையை சீனா மீண்டும் தொடங்குவது, நேபாளச் சுற்றுலாத் துறையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் இயக்காற்றலை வழங்கும் என்று நேபாளத்துக்கான சீனத் தூதர் சென் சொங் தெரிவித்தார்.