7வது பட்டுப்பாதை சர்வதேசப் பொருட்காட்சியும், கிழக்கு மற்றும் மேற்கு சீன ஒத்துழைப்புக்கான முதலீடு மற்றும் வர்த்தக மன்றக்கூட்டமும் நவம்பர் 20ஆம் நாள் சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் ஷிஅன் நகரில் நிறைவு பெற்றது.
தரவுகளின்படி, நடப்புப் பொருட்காட்சியில் 1857 ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் கையொப்பமாகின. மொத்த முதலீட்டுத் தொகை 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. அவற்றில் அந்நிய முதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 46, மொத்த ஒப்பந்தமுதலீட்டுத் தொகை 905.4 கோடி அமெரிக்க டாலராகும்.
மேலும், இப்பொருட்காட்சியில், சர்வதேசப் பரிமாற்றம், திறப்புப் பணி மேடை, பிரதேச ஒத்துழைப்பு, நவீன வேளாண் துறை, முன்னேறிய தயாரிப்புத் தொழில், நவீனச் சேவை தொழில் ஆகிய 6 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. 1600க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தன.