Web team
யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி !
இனிப்பு உணவில் சேர்க்காதே என்கின்றனர்
இனிப்பு உணவில் சேர்த்திடு என்கின்றனர் !
அசைவம் உண்ணாதே கேடு என்கின்றனர்
அசைவம் உண்ணு நன்மை என்கின்றனர் !
முட்டை உணவில் வேண்டாம் என்கின்றனர்
முட்டை உணவில் வேண்டும் என்கின்றனர் !
கோதுமை உணவில் சேருங்கள் என்கின்றனர் !
கோதுமை சேர்க்க வேண்டாம் என்கின்றனர் !
சர்க்கரை அளவு அடிக்கடி சோதி என்கின்றனர்
சர்க்கரை அளவு சோதிக்க வேண்டாம் என்கின்றனர் !
உலகம் முழுவதும் மனிதனுக்கு சர்க்கரையின்
உச்சப்பட்ச அளவு ஒன்றுதான் என்கின்றனர் !
ஊருக்குஊர் தட்பவெப்பபடி சர்க்கரையின்
உச்சப்பட்ச அளவு மாறும் என்கின்றனர் !
சர்க்கரை நல்லது கெட்டது இரண்டு வகை உண்டு
சோதனையில் இரண்டையும் ஒன்றாகவே காட்டும் !
சர்க்கரை நோய் என்பதே உள்நோக்கமான கற்பிதம்
சர்க்கரை நன்மை தரும் நோயன்று என்கின்றனர் !
ஆங்கில மருந்துகள் விற்பதற்காகவே இவர்கள்
அனைவரையும் நோயாளி ஆக்குகின்றனர் !
ஆங்கில மருத்துவம் போலி என்கின்றனர்
சித்த மருத்துவம் போலி என்கின்றனர் !
மருத்துவத்திலும் வந்தது அரசியல் குழப்பம்
மருந்திலும் வந்தது அரசியல் குழப்பம் !
பேலியோ உணவுமுறை என்கின்றனர்
போலியோ என சிலர் சந்தேகிக்கின்றனர் !
சர்க்கரையின் உச்சப்பட்ச அளவு அன்று வேறு
சர்க்கரையின் உச்சப்பட்ச அளவு இன்று வேறு !
இவர்களாகவே அளவை நிர்ணயித்து உள்ளனர்
இவர்களின் தவறான கற்பிதம் என்கின்றனர் !
போலியான உணவுக்குக் கட்டுப்பாடு என்பது
பொலிவானவர்களையும் நோயாளியாக்கும் !
எல்லாம் தெரிந்தபோது குழப்பம் வந்தது
எதுவும் தெரியாதபோது நிம்மதி இருந்தது !