இலங்கை தலைமை அமைச்சர் அமரசுரியா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். சீனாவின் வளர்ச்சி சாதனைகளைப் பாராட்டிய அவர், சீனாவிலிருந்து பொறுப்பு, ஒழுங்கு, மக்களுக்காகச் செயல்படுவது ஆகிய மூன்று அறிவுறுத்தல்களைக் கற்றுக்கொண்டேன் என்றும், அவற்றில் மக்களுக்காகச் செயல்படுவது, மைய அம்சமாகும். மக்களின் வாழ்க்கை மேம்பாடு, சீனாவில் ஏற்பட்ட அதிசயங்களின் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்காகச் செயல்படுவது, சீன வரலாற்று மற்றும் சீன புரட்சி போக்கில் பரவி வந்த மைய எழுச்சியாகும். மக்களுக்காகச் சேவை புரிந்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, அதன் அடிப்படை இலக்காகும். இந்த பாதை வெற்றி அடைந்தது, உண்மையால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கின் நனவாக்கம், பயன் தரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அமரசுரியா கூறினார்.
