சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ஜின்காங் மே 9ஆம் நாள் பெர்லின் நகரில் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பெர்பொக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜின் காங் கூறுகையில், மாற்றம் மற்றும் கலவரம் வாய்ந்த சர்வதேச நிலைமையில், சீனாவும் ஜெர்மனியும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். நடைபெறவுள்ள 7வது சீன-ஜெர்மனி கலந்தாய்வு கூட்டத்துக்கு, இரு தரப்பும் கூட்டாக ஆயத்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பெர்பொக் கூறுகையில், 7வது சீன-ஜெர்மனி கலந்தாய்வு கூட்டம், கோவிட்-19 நோய் பரவலுக்குப் பிந்தைய முதலாவது கூட்டமாகவும், இரு தரப்பின் புதிய அரசின் முதலாவது சுற்று கலந்தாய்வு கூட்டமாகவும் திகழ்கிறது. இக்கூட்டத்தில் சீனாவுடன் இணைந்து முன்னேற்றங்களைப் படைக்க ஜெர்மனி அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.