பார்படாஸ் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பார்படாஸ் தலைமை அமைச்சர் மொட்லே அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் அப்போது கூறுகையில், பார்படாஸ், சீனாவின் நட்பு நண்பர் மற்றும் கூட்டாளியாகும். பார்படாஸ், சீனாவுடன் ஒத்துழைத்து, கூட்டு வெற்றி பெற வரவேற்கிறேன். சீன-பார்படாஸ் பொது எதிர்கால சமூகத்தை இரு தரப்பும் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மொட்லே அம்மையார் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் வளர்ச்சி நலன்களைக் கொண்டு வரும் விதம், ஷிச்சின்பிங் அவர்களால் முன்வைக்கப்பட்ட உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவுக்கு ஒரு மனதாக இசைத்தேன் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author