இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகள் மீதான பொருள் குவிப்பு எதிர்ப்பு வரிக்கான காலாவதி மதிப்பாய்வை ஆகஸ்ட் 14 ஆம் நாள் முதல் தொடங்கவுள்ளதாகச் சீன வணிக அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மதிப்பாய்வின் போது சீன அரசவையின் சுங்க வரி விதிப்பு ஆணையமானது பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை மாற்றமால் இப்போதிருக்கும் விகிதத்திலேயே நிலைநிறுத்தும் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை முறை கண்ணாடி இழைகள் மீது சீனா 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை விதிக்கத் தொடங்கியது. 7.4 முதல் 30.6 சதவீதம் வரையிலான கட்டணங்களைக் கொண்டிருந்த இந்த வரிவிதிப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.