சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் 27ம் நாள் தியேன் ஜின் மாநகரில், உலக பொருளாதார மன்றக்கூட்டத்தின் தொழில் முனைவோர் உரையாடலில் பங்கெடுத்து, முனைவோர் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.
லீச்சியாங் கூறுகையில், தற்போதைய உலகிற்கு மிகவும் தேவையானது தொடர்பு ஆகும். மிகவும் முக்கியமானது திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகும். பல்வேறு தரப்புகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சீனா, திறப்பு, பொறுமை மற்றும் நேர்மை தன்மை வாய்ந்த நாடாகும். உயர் வரையறையுள்ள சர்வதேச வர்த்தக விதிகளுடன் ஒன்றிணைந்து, அமைப்பு முறை தன்மை வாய்ந்த திறப்பளவை விரிவாக்கி, முதல் தர வணிகச் சூழலை உருவாக்குவதை சீனா விரைவுப்படுத்தி வருகிறது. அதனால், சீனாவில் முதலீடு செய்வதென்பது, மேலும் சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதாகும் என்று தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்கள் கூறுகையில், சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியில் ஈடுபட்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் கூட்டாளியுறவை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தனர்.