சீன-நியூசிலாந்து உறவின் புதிய 50 ஆண்டுகாலம்

 

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 27ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து தலைமை அமைச்சர் ஹிப்கிங்ஸைச் சந்தித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகளில், சீன-நியூசிலாந்து உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை தந்துள்ளது. நாங்கள் கூட்டாக பாடுபட்டு, இரு நாட்டுறவின் புதிய 50 ஆண்டுகாலத்தைத் திறந்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.

பொருளாதாரம், பொது மக்கள், பண்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவு சீராக உள்ளது. இப்பயணத்தோடு, இருதரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்ற விரும்புகிறேன் என்று ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.

You May Also Like

More From Author