3ஆவது சீன-ஆப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி நிறைவு

4 நாட்கள் நீடித்த 3ஆவது சீன-ஆப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி ஜூலை 2ஆம் நாள் நிறைவு பெற்றது. இப்பொருட்காட்சியில் 1030 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 120 திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டன. இதுபற்றி ஆப்பிரிக்க வணிகர்கள் கூறுகையில், இந்த ஒத்துழைப்புச் சாதனைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நன்மை புரிந்துள்ளதோடு, சீனச் சந்தையின் பெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் மெய்ப்பித்துள்ளது எனத் தெரிவித்தனர்.
புதிய தரவுகளின்படி, இப்பொருட்காட்சியில் 1700 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கெடுத்தனர். பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், வேளாண்மை, எரியாற்றல், சேவை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கையொப்பமிடப்பட்டுள்ள மற்றும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் உயர்வேக அதிகரிப்பைக் கண்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author