சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சிறப்பு பிரதிநிதிகளின் 23ஆவது பேச்சுவார்த்தை 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனத் தரப்பின் சிறப்புப் பிரதிநிதி வாங் யீயும், இந்தியத் தரப்பின் சிறப்பு பிரதிநிதி தோவலும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினை குறித்து விவாதித்து, 6 ஒத்த கருத்துக்களை எட்டினர்.
முதலில், எல்லைப் பிரச்சினை பற்றி இரு நாடுகள் தீர்வு முறையை எட்டுவதை இரு தரப்பினரும் பாராட்டியதோடு, இத்தீர்வு முறையை தொடர்ந்து சீராக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இரண்டு, இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வு முறையைத் தொடர்ந்து நாட வேண்டும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மூன்று, எல்லைப் பகுதியின் சூழ்நிலையை இரு தரப்பினரும் மதிப்பிட்டு, நம்பிக்கை நடவடிக்கை மேற்கொள்வதை வலுப்படுத்தி, எல்லைப் பகுதியின் தொடரவல்ல அமைதி மற்றும் நிலைத்தன்மையை நனவாக்க ஒப்புக்கொண்டனர்.
நான்கு, எல்லை கடந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஐந்து, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் கட்டுமானத்தை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஆறு, அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய சுற்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.