சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ட்சேங், ஜுலை 2ஆம் நாள் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11ஆவது உலக அமைதி மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
ஹான் ட்சேங் கூறுகையில், சர்வதேச நிலைமை ஆழமாக மாறி வரும் நிலையில், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு, உலகளாவிய நாகரிக முன்னெடுப்பு ஆகிய முக்கிய முன்னெடுப்புகளை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்துள்ளார். மனிதகுலம் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சீனாவின் ஞானம் மற்றும் திட்டங்களை இது வழங்கியதோடு, உலகின் அமைதியான வளர்ச்சிக்கு வலுவான நேர்மறை ஆற்றலையும் ஊட்டியுள்ளது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காத்து, உலகளாவிய வளர்ச்சி மற்றும் செழுமையை நாடி, நாகரிக பரிமாற்றத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
மேலும், சுதந்திரத்தையும் ஒன்றுக்கு ஒன்றுடனான மதிப்பையும் கடைப்பிடிப்பது, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் மோதல்களைத் தீர்ப்பது, பலதரப்புவாதத்தை உறுதியுடன் பேணிக்காத்து நடைமுறைப்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, ஒன்றுக்கு ஒன்று நலன் மற்றும் கூட்டு வெற்றியை முன்னேற்றுவது ஆகிய 4 அம்ச முன்மொழிவையும் அவர் வழங்கினார்.