9வது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் கருத்து

9வது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தையை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசுபும் ஜனவரி 8ஆம் நாள் நடத்தினர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 9ஆம் நாள் கூறுகையில், புதிய ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் பதவி ஏற்றது முதல் இதுவரை, சீனாவுக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் இடையிலான முக்கிய நெடுநோக்கு தொடர்பு இதுவாகும் என்றார்.

இப்பேச்சுவார்த்தையின்போது, சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சி, சீன-ஆப்பிரிக்க ஒன்றிய ஒத்துழைப்பு, இரு தரப்பும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் முதலியவை குறித்து இருவரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர் என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author