மனித குலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தூதாண்மை சிந்தனையின் முக்கிய கருத்தாகும். புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பெரிய நாட்டின் தூதாண்மை நாட்டத்தின் உயர்ந்த குறிக்கோளாகும். இவ்வாண்டு முதல், உலகளாவிய பார்வை, உலகிற்கான அன்பு மற்றும் உலகின் மீதான பொறுப்புடன், நாடுகளுக்கிடையிலான அரசு தலைவரின் தூதாண்மையை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, நவீனமயமாக்கப் பாதையில் உலகின் பல்வேறு நாடுகளுடன் கையோடு கை கோர்த்து, மனிதச் சமூகத்திற்கு மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கினார்.
ஷிச்சின்பிங் தூதாண்மை சிந்தனையின் தலைமையில், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பெரிய நாட்டு தூதாண்மை, புதிய நிலைமையை இடைவிடாமல் திறந்து வருகின்றது.
மனித குலப் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பிரகாசமான கொடியைச் சீனா உயர்த்தி, உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி, சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் புதிய சாதனையுடன் உலக வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கி, மனிதச் சமூக நவீனமயமாக்கத்தின் புதிய எதிர்காலத்தைக் கூட்டாக வரைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.