சீனாவில் வர்த்தக வாகனங்களுக்கான இருப்புப்பாதை போக்குவரத்து தளம்

5 மாதங்களுக்கும் மேலான கட்டுமானப் பணிக்குப் பிறகு, சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள வர்த்தக வாகனங்களுக்கான மிகப் பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து தளம் ஜூலை 5ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் துவங்கியது. வர்த்தக வாகனங்கள், ஷான்தொங், சிச்சுவான், குவாங்தொங் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் நகரங்களிலிருந்து இருப்புப்பாதையின் மூலம் இத்தளத்துக்கு அனுப்பபட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து யுன்னான் மாநிலத்துக்கும், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இவ்வாகனங்கள் விற்பனை செய்யப்படும்.
குன்மிங் நகரின் பீச் மலர் கிராமத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் சதுர மீட்டராகும். அதன் சேமிப்பு பகுதியின் நிலப்பரப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். அங்கே ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேலான வர்த்தக வாகனங்கள் சேமிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன என்று மதிபிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author