ஜுலை 4ஆம் நாள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், ஈரான் இவ்வைப்பின் உறுப்பு நாடாக இணைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான் சேர்வது பற்றிய குறிப்பாணை, கடந்த ஆண்டின் செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சமர்கண்ட் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து பல்வேறு செயல்முறைகளை நிறைவேற்றி, ஈரான் தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.