இவ்வாண்டு சீன-சோமாலியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவாகும். சோமாலியா அரசுத் தலைவர் ஹசன் ஷேக் முகமது அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
இரு நாட்டுறவின் வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக, ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், இரு நாடுகள் நட்புறவை நிலைநிறுத்தி வருகிறது. சோமாலியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, சீனா உறுதியுடன் ஆதரவளித்து வருகிறது. நாம் முயற்சிகளை மேற்கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, விரிவாக்கி வருகிறோம் என்றார்.
வறுமை ஒழிப்பு மற்றும் தொழில் நுட்ப புத்தாகத் துறையில், சீனா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது, சீனா திறப்புப் பணியை மேற்கொண்டு, ஆப்பிரிக்காவுடன் முன்னேறிய தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டு, உலகத்துக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் திறப்புப் பணி, பல்வேறு துறைகளில் ஆப்பிரிக்க நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்புகளை முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
