மனித உரிமை பற்றிய சீனாவின் கருத்து மற்றும் முயற்சிகள்

Estimated read time 1 min read

 

ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 61ஆவது கூட்டம் பிப்ரவரி 23முதல் மார்ச் 31ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. அதில் பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் பற்றிய பொது விவாதத்தில் சர்வதேச புரிந்துணர்வுக்கான சீன சங்கத்தின் பிரதிநிதியும், சிங்குவா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தின் ஆசிரியருமான ஜிங்வேன்காய் உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில், இளைஞர்கள் கல்வியைப் பெறும் உரிமைகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதற்காக, சிங்குவா பல்கலைக்கழகம் 3 நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. முதலாவது, குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது. தன்னார்வ தொண்டர்களைத் தொடர்ச்சியாகச் சீனாவின் வறுமைப் பிரதேசங்களில் கல்விப் பணியில் ஈடுபடச் செய்வது. மூன்றாவது, இணைய வகுப்பு மூலம், கல்வி வளங்கள் குறைந்த பிரதேசங்களுக்கு தரமான வகுப்புகளைப் பகிர்ந்து கொள்வது என்று கூறினார்.

 

 

You May Also Like

More From Author