உலகிற்குப் பல நன்மைகளைக் கொண்டு வரும் சீன வெளிநாட்டு வர்த்தகம்

Estimated read time 0 min read

ஆகஸ்டு 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின் படி இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 24 இலட்சத்து 83 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும். புவியமைவு அரசியல் அபாயங்கள் அதிகரித்து, உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு பாதிப்பு எற்பட்டது என்ற பின்னணியைக் கொண்டு பார்க்கும் போது இந்த வளர்ச்சி எளிதானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அளவு அதிகரித்து வருவதோடு தரமும் மேலும் சிறந்ததாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சீன வெளிநாட்டு வர்த்தகம் நிலையானதாக உள்ளதோடு மேம்பட்டும் வருகின்றது. இப்போக்கு, சீனப் பொருளாதாரத்தின் உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகிற்கு பல நன்மைகளையும் தந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, சீனாவின் மாபெரும் அளவிலான சந்தை பல வாய்ப்புகளைக் கொண்டுவருகின்றது. அதே வேளையில், உள்ளூரின் நிலைமைக்கு ஏற்ப, புதிய தர உற்பத்தி திறனை வளர்த்து, புதிய இயக்கு சக்திகளை உலகிற்குக் கொண்டு வருகின்றது. அதோடு, நீண்ட காலமாக, உலகத் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காக்கவும், சீன வெளிநாட்டு வர்த்தகம் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகின்றது.
தற்போது, சீர்திருத்தத்தைச் சீனா மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது. வெளிநாட்டுத் திறப்பைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி, பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சிக்கான அடித்தளத்தை தொடர்ந்து வலுப்படுத்தி, உயர் தர வளர்ச்சி மற்றும் வலிமை மிக்க வெளிநாட்டு வர்த்தகத்துடன் உலகிற்கு அதிக நன்மைகளைக் கொண்டுவருகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author