சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை உத்தரவாதமாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். இவ்வாண்டில், பெரிய கட்சி மட்டும் எதிர்கொண்ட இன்னல்களைச் சமாளிக்கும் தெளிவான சிந்தனை மற்றும் மனவுறுதியுடன், முழு கட்சிக்குள் சுய சீர்திருத்த எழுச்சியைக் கொணர்ந்து, ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், கட்சி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படிப்பை முன்னேற்றுவதற்கும் ஷிச்சின்பிங் தலைமை தாங்கினார். பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, வல்லரசு கட்டுமானம், தேசிய மறுமலர்ச்சி ஆகியவை தொடர்பாக அவர் உறுதியான அரசியல் உத்தரவாதத்தையும் அளித்துள்ளார்.
கட்சிக் கட்டுமானம், கட்சியின் சுய சீர்திருத்தம் உள்ளிட்ட ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலின் புதிய பாதையில் மேலதிக சிறந்த சாதனைகளைப் படைப்பது உறுதி.