2025ஆம் ஆண்டில் சீனா முழுவதும் நகரப்புறங்களில் 1 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, சராசரி வேலையின்மை விகிதம் 5.2 விழுக்காடாகும். பொதுவான வேலைவாய்ப்பு நிலைமை சீரான நிலையில் இருந்தது. சீன மனித வளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் ஜனவரி 20ஆம் நாள் வெளியிட்ட தகவலின் மூலம் இது தெரிய வந்தது.
இந்த அமைச்சகத்தின் தலைவர் வாங் சியாவ்பிங் கூறுகையில், 2026ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலைமையை நிதானப்படுத்தும் விதம், கொள்கை, சேவை, கண்காணிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு முன்னேற்றப்படும் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக பட்டதாரிகள் உள்பட இளைஞர்களுக்கு புதிய சுற்று வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு கொள்கை நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வகுக்கப்படும். தவிரவும், வேலைவாய்ப்பில் ஏஐ தாக்கம் மீதான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறைமையும், வேலைவாய்ப்பு பெறுவதற்கு உகந்த தொழில்நுட்ப வளர்ச்சி வழித்தடமும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
