14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீன நாடவளவில் இருப்புப் பாதைகளின் மொத்த நீளம் 1லட்சத்து 46ஆயிரத்து 300கிலோமீட்டரில் இருந்து 1லட்சத்து 65ஆயிரம் கிலோமீட்டராகி 12.8விழுக்காடு அதிகரித்துள்ளது. அவற்றில் உயர்வேக இருப்புப்பாதைகளின் நீளம் 32.98விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் சீன இருப்புப்பாதையில் 90150கோடி யுவான் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டை விட, 6விழுக்காடு அதிகரித்துள்ளது.
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இருப்புப்பாதை வலைப்பின்னலின் கட்டுமானத்தைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும். 2030ஆம் ஆண்டு வரை, நாடளவில் இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1லட்சத்து 80ஆயிரத்தை எட்டவுள்ளது. அவற்றில் உயர்வேக இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 60ஆயிரம் கிலோமீட்டரை அடையும்.
