26வது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகக் கண்காட்சி சியாமென் நகரில் நடைபெற உள்ளது
முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான 26வது சீன சர்வதேச கண்காட்சி செப்டம்பர் 8 முதல் 11ஆம் நாள் வரை ஃபூஜியான் மாகாணத்தின் சியாமென் நகரில் நடைபெற உள்ளது என்றும், இதுவரை கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்றும் சீன வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 25ஆம் நாள் தெரிவித்துள்ளது.
நடப்பு கண்காட்சியில் பதிவு செய்துள்ள 123 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதி குழுக்களில், 60 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. இக்கண்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடுகளான பின்லாந்து மற்றும் சவூதி அரேபியா, உயர்மட்ட அரசு மற்றும் நிறுவனப் பிரதிநிதி குழுக்களை இக்கண்காட்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்வதோடு, பல்வேறு பரிமாற்ற நடவடிக்கைகளையும் நடத்த உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
