தென்கொரிய அரசுத் தலைவர் லீ ச்செ ம்யுங்கும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் நவம்பர் முதல் நாள் மாலை, கியொங்ஜு அருங்காட்சியகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-தென்கொரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 33 ஆண்டுகளில், இரு நாடுகள் பல்வேறு துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு செழுமையைப் பெற்றுள்ளன. சீன-தென்கொரிய உறவின் சுமுகமான வளர்ச்சியை முன்னெடுப்பது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருத்தமான காலத்துக்கிணங்க சரியான தேர்வாகும். இரு நாட்டுறவில் முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, தென் கொரியாவுடன் தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொது நலன்களை விரிவாக்கி, சவால்களைக் கூட்டாகச் சமாளிக்கவும், சீன-தென்கொரிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைத் தூண்டி, பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நேர்மறை சக்தியை ஊட்டவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
அதே வேளையில் சீன-தென்கொரிய உறவுக்கான புதிய நிலைமை குறித்து ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, நெடுநோக்கு நிலையிலான தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இராண்டாவதாக, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். மூன்றாவதாக, மக்களின் நட்புணர்வை உயர்த்த வேண்டும். நான்காவதாக, பலதரப்பு ஒன்றிணைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
