சீனாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி, புதிய பாஸ்ட்-சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு விநாடி சார்ஜிங் 2 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகம், 5 நிமிட சார்ஜிங்கில் 407 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்ற சாதனை படைத்துள்ளது.
இந்த அதிநவீன சார்ஜிங் தொழில்நுட்பமானது, இந்நிறுவனத்தின் ‘சூப்பர் இ-பிளாட்ஃபார்ம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. இது, பேட்டரி சார்ஜிங் நேரத்தை குறைக்கவும், ஓட்டுநர்களின் சௌகரியத்தை மேம்படுத்தவும் உதவும். பேட்டரிக்கு அதிகபட்சமாக 1 மெகாவாட் சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது என்று பி.ஒய்.டி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
பாரம்பரிய வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்புவதுடன் ஒப்பிடுகையில், சார்ஜிங் நேரத்திற்கு சமமாகும் என்றும் இது மைலேஜ் தொடர்பான கவலையை போக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிவேக சார்ஜிங தொழில்நுட்பத்தை பரவலாக பயன்படுத்துவதற்காக, முதற்கட்டத்தில் நாடளவில் 4,000-க்கும் மேலான சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாக பி.ஒய்.டி நிறுவனம் அறிவித்தது.