ஜுலை 29ஆம் நாள் சீனாவின் யீவூ நகரிலிருந்து ஜுலை 29ஆம் நாள் ஸ்பேயினின் மாட்ரிட் செல்வதற்குப் புறப்பட்ட X-8020 தொடர்வண்டி, இவ்வாண்டில் இயங்கும் 10000ஆவது சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 22 நாட்கள் முன்கூட்டியே இந்த எண்ணிக்கை 10000ஐ எட்டியது. இவற்றின் மூலம் 10.83 லட்சம் பெட்டிகளின் சரக்குகள் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 27 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீன ரயில்வே குழுமத்தின் சரக்கு போக்குவரத்து துறையின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், நோய் தொற்று கட்டுப்பாட்டு நிலைமை சீராக மாறிய பிறகு, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரம் நிதானமாக உயர்ந்து வருவதோடு, எல்லை கடந்த சரக்கு போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது.
முழு நாள் சேவை, பெரிய போக்குவரத்து திறன், பசுமை மற்றும் பாதுகாப்பு ஆகிய மேம்பாடுகளைக் கொண்ட சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி வரவேற்பைப் பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டத்தில், சீன ரயில்வே குழுமம் சர்வதேச இருப்புப்பாதை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொழில் மற்றும் வினியோக சங்கிலிகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், புதிய வளர்ச்சி கட்டமைப்புக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்துக்கும் சேவைபுரிவதிலும் மேலும் பெரும் பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.