சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தேனாம்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆணையர் தரணிதரன் வீட்டில், CRPF பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் திருவொற்றியூரில் போக்குவரத்து தொழில் செய்து வரும் முருகேசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
