பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெண்கலம்  

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ மல்யுத்தத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை முறியடித்து அமன் ஷெராவத் பதக்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது அபார செயல்திறன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமன் ஷெராவத், காலிறுதியில் அல்பேனியாவின் அபகரோவ் ஜெலிம்கானை வீழ்த்தினார்.
எனினும், வியாழன் அன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் அமன் ஷெராவத் ஜப்பானின் ரெய் ஹிகுச்சியிடம் தோற்ற நிலையில், தற்போது வெண்கலத்தை வென்றுள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

You May Also Like

More From Author