இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை “சீனாவின் உள்ளார்ந்த பகுதி” என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) தாண்டிய பிராந்திய உரிமைகோரல்களுக்கான எந்தவொரு முயற்சியையும், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என அவர் மேலும் கூறினார்.
நேற்று, புதன்கிழமை, தனது தினசரி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது,
மேலும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தாண்டிய சிவிலியன் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” எனக்கூறினார்.
