உலக சிங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சிங்கங்களை பாதுகாப்பதும், அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.
உலக சிங்க தினம் மனித அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்க ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.
காடுகள் அழிப்பால் வசிப்பிட இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் போன்ற காரணங்களால், சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, விரைவில் அழிந்து வரும் உயிரினங்களின் நிலையை நெருங்குகிறது.
தற்போது உலக அளவில் சிங்கங்களின் எண்ணிக்கை 30,000 முதல் 1,00,000 வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.