ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் உயர்வு

ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் உயர்வு

முதல் 7 மாதங்களில், சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை 4 இலட்சத்து 9 ஆயிரத்து 917 கோடி யுவானாகும்.

இது, கடந்த ஆண்டை விட 3.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஜூலை மாதத்திலான இலாபத் தொகை, கடந்த ஆண்டை விட 4.1 விழுக்காடு அதிகரித்தது. ஜூலை இறுதியில், இத்தகைய தொழில் நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் தொகை ஒரு கோடியே 72 இலட்சத்து 76 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 5.3 விழுக்காட்டு அதிகரித்தது.


இதே காலத்தில், அரசு கட்டுப்பாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 173 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 1.0 விழுக்காடு அதிகரித்தது.

தனியார் தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 310 கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டை விட 7.3 விழுக்காடு அதிகரித்தது.

You May Also Like

More From Author