15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்க சீனாவுக்கு வருகை தந்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ராபர்ட் கோவென்ட்ரி மற்றும் வாழும் வரை கெளரவ கமிட்டி தலைவர் தாமஸ் பாக் ஆகியோரை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 9 ஆம் நாள் பிற்பகல் குவாங்சோ நகரில் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தேசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் மிகப்பெரிய மற்றும் உயர்நிலை பன்நோக்கு தன்மை வாய்ந்த விளையாட்டு நிகழ்வு என்றும், குவாங்தொங், ஹாங்காங் மற்றும் மக்கெள ஆகிய மூன்று பகுதிகளை இணைந்து நடத்தப்படுவதாகவும் கூறினார்.
குவாங்தொங்-ஹாங்காங்-மக்கெள பெரிய விரிகுடா மண்டலம், சீனாவின் மிகவும் திறந்த மற்றும் பொருளாதார ரீதியாக துடிப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். தேசிய விளையாட்டுப் போட்டி புதிய காலத்தில் சீன விளையாட்டுகளின் வளர்ச்சியில் புதிய சாதனைகளைச் சாட்டியுரைவது மட்டுமல்லாமல், இம்மண்டலத்தில் சீன நவீனமயமாக்கலின் துடிப்பான நிலைமையை வெளிப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா ஒலிம்பிக் எழுச்சியை ஆக்கப்பூர்வமாக பின்பற்றுவதாகவும், சர்வதேச ஒலிம்பிக் இலட்சியத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்வதாகவும் கோவென்ட்ரியும் பாகும் தெரிவித்தனர். தொடங்கவுள்ள சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி ஒரு அற்புதமான மற்றும் வெற்றிகரமான நிகழ்வாக இருக்கும் என்றும், இது சீன விளையாட்டுகளில் புதிய முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
