அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் பெய்ஜிங்கிற்கு வருகை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமா வாங் யீயின் அழைப்பின் பேரில்,
அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவன் ஆகஸ்டு 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு, புதிய சுற்று சீன-அமெரிக்க நெடுநோக்குப் பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் 27ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இது முதன்முறையாகும்.
சல்லிவனின் பதவிக் காலத்தில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இது, சான் பிரான்சிஸ்கோவில் எட்டப்பட்ட இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை இரு தரப்புகள் செயல்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.