ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை செயலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
சோமநாதன் இரண்டு ஆண்டுகளுக்கு அமைச்சரவை செயலாளராக இருப்பார்.
தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சோமநாதன், கொரோனா தொற்றின்போது ஏழைகளுக்கான மத்திய அரசின் நிவாரணத் திட்டமான பிஎம் கரீப் கல்யாண் யோஜனா மற்றும் ஆத்மாநிர்பார் பாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சோமநாதன் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாக மேம்பாட்டுத் திட்டத்தை முடித்துள்ளார்.
மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக டிவி சோமநாதன் பொறுப்பேற்பு
