சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 27ஆம் நாள், ஆப்பிரிக்காவின் 50 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு கடிதம் மூலம் பதிலளித்தார். உயர்நிலை சீன-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கும், “உலகின் தெற்கு பகுதியின்” பொது நலன்களைப் பேணிக்காப்பதற்கும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் இக்கடிதத்தில் தெரிவித்தார்.
அமைதி மற்றும் வளர்ச்சியை நாடி, சீர்திருத்தம் மற்றும் திறப்பை முன்னேற்றி வருகின்ற சீனாவின் வளர்ச்சி, உலக அமைதி மற்றும் சர்வதேச நீதியான ஆற்றலை வலுப்படுத்துவது உறுதி. சீனாவும், ஆப்பிரிக்காவும் பொது எதிர்காலச் சமூகமாகும். சிக்கலான உலக நிலைமையில், இரு தரப்பும் மேலும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் நடப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. தெற்கு நாடுகளின் வளர்ச்சிப் பாதை, சீன-ஆப்பிரிக்க மற்றும் தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஆகியவை பற்றிய ஆய்வுகளை நீங்கள் வலுப்படுத்தி, உயர்நிலை சீன-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கு அறிவுரை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பு, ஆப்பிரிக்காவின் 50 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் அதிகமான அறிஞர்கள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்குக் கடிதம் அனுப்பி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பாராட்டினர்.