வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த நிலையில் தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால் பூருக்கு இடையே கலிங்கப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க கூடும். இதனால் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.