சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அலுவலகம், சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கிராமப்புறப் புத்துயிர் வாரியம் ஆகியவை, அண்மையில் 2023ம் ஆண்டு கிராமப்புறங்களில் எண்ணியல் வளர்ச்சிப் பணிக்கான முக்கிய அம்சங்கள் என்ற ஆவணத்தைக் கூட்டாக வெளியிட்டன. அதில் எண்ணியல் வழிமுறை மூலம் தானியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட 10 துறைகளில் முக்கிய கடமைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில், தேசியத் தானியப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பின் சாதனைகளைப் பலப்படுத்துவதற்கு, எண்ணியல் தொழில் நுட்பம் வலுவான ஆதாரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு இறுதிக்குள், கிராமப்புறங்களில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, 19 கோடியைத் தாண்டும். கிராம நிலைக்கு மேலான பகுதிகள் அனைத்தும் 5ஜி இணைய சேவையில் சேர்க்கப்படும். மின்னணு வணிக மேடையின் மூலம், வேளாண் பொருட்களின் சில்லறை தொகை, 58 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும் என்றும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.