மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யிச்சொங்குடன் சந்திப்பு நடத்தினார்.

மக்கௌவில் தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணி பற்றி ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார்.


ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீன நவீனமயமாக்கத்தின் மூலம் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றி வருகிறோம். சீன மத்திய அரசு, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியுடன் செயல்படுத்தும்.

மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, சமூகத்தின் பல்வேறு துறையினர்களுக்குத் தலைமைத் தாங்கி, நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை இறுகபற்றி, மக்கௌவில் புதிய வளர்ச்சி சாதனைகளை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு முழுமூச்சுடன் ஆதரவு அளிக்கும் என்றார்.

You May Also Like

More From Author