மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் 10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?  

நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், அந்த இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன.
இதனிடையே, கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் விட்டு விலகுவதாக இருந்தால் அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author