நடு இலையுதிர்கால விழாவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த சிறப்பு கலை நிகழ்ச்சி இன்று செவ்வாய்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது. பாடல், நடனம், நாடக இசை, இசை கருவி வாசித்தல் உள்ளிட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்கள் பாரம்பரியமிக்க சீனப் பண்பாடுகளைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த கொண்டாட்டக் கலை நிகழ்ச்சி சீனாவின் ஷென்யாங் மாநகரில் நடைபெறுகிறது. சுமார் 2300ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்நகரத்தில் 1500க்கு அதிகமான வரலாற்று சின்னங்கள் நிறைந்து உள்ளன.
