சீன அரசவை செப்டம்பர் 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கத்தை சீனா பெரிதும் முன்னேற்றுவது பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில், உலகில் மிக பெரிய, மிக பரந்துபட்ட இணைய உள்கட்டமைப்பை சீனா கட்டிமுடித்துள்ளது. 5G தளங்களின் எண்ணிக்கை, 45 லட்சத்து 98 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 5G பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, நுண்ணறிவு தயாரிப்பில் குறிப்பிட்டத்தக்க பயன்கள் பெறப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, பல்வேறு துறைகளுக்கு உயிராற்றலை ஊட்டியுள்ளது.
புதிய தலைமுறை நுண்ணறிவு முனையத்தின் பயன்பாடு விரைவாகி, மனித உருவ இயந்திரம் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட துவங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.