ஜூன் 2இல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Estimated read time 0 min read

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும் என்றும், வாரம் ஒருமுறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author